Villupuram district information, விழுப்புரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள்,







*விழுப்புரம் மாவட்டம்* - சிறப்பு தகவல்கள்:

👏குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களையும் கொண்ட ஒரே மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

👏 தமிழில் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இயற்றிய புலவர்கள் வாழ்ந்த மண் விழுப்புரம் மாவட்டம். (கம்பர் - கம்பராமாயணம் - திருவெண்ணெய் நல்லூர்; வில்லிபுத்தூரார் - வில்லிபாரதம் - திருக்கோயிலூர்)

👏 சைவ சமய குறவர்கள் நால்வரில் சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்து வளர்ந்த திருநாவலூர் புண்ணிய மண் விழுப்புரம் மாவட்டம்.

👏 முகலாய மன்னனின் பஞ்சகல்யாணி குதிரையை தன் ஒன்பதே வயதில் அடக்கி தன் தந்தையை சிறை மீட்டு வந்த வீரன் தேசிங்குராஜன் ஆண்ட செஞ்சிக்கோட்டை உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

👏 காஞ்சிப்பெரியவர் பிறந்தது விழுப்புரம் மாவட்டம்.
நம் மண்ணின் முதல் முதலமைச்சர் ஓமந்தூரார் பிறந்ததும் விழுப்புரம் மாவட்டம்.

👏 பாரதியார், கட்டபொம்மன் முதலான வீரத்தமிழர்களை வெள்ளித்திரையில் வேடமிட்டுக் காட்டிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தது விழுப்புரம் மாவட்டம்.

👏 பரணர், கபிலர் போன்ற புலவர்கள் வாழ்ந்த மண் விழுப்புரம் மாவட்டம்.

👏 முல்லைக்கு தேர்கொடுத்த பாரி வள்ளளின் மகள்களுக்கு ஆதரவளித்த மன்னன் தெய்வீகன் ஆண்ட திருக்கோயிலூரை கொண்டது விழுப்புரம் மாவட்டம்.

👏 மகாபாரக் கதையில் வரும் அரவான் கோயில் கொண்ட உலகப்புகழ் பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் ஆலயம் உள்ளது விழுப்புரம் மாவட்டம்.

👏 கல்வராயன் மலை நீர்வீழ்ச்சி, ஆரோவில் நகரம், செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை உள்ளடக்கியது விழுப்புரம் மாவட்டம்.

👏 நெல், கரும்பு, மணிலா, உற்பத்தியோடு மரக்காணம் உப்பளத்தில் உப்பும் உற்பத்தி செய்யும் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

👏 அருணகிரி நாதரால் பாடல்பெற்றதும், குன்றோடு கோயில்கொண்டுள்ள மயிலம் முருகன் ஆலயத்தையும், வீரசைவ மடமான மயிலம் பொம்மாபுரம் ஆதீனத்தையும் கொண்டது விழுப்புரம் மாவட்டம்.

👏 திருவக்கரை வக்ரகாளியும், மேல்மலையனூர் அங்காளம்மனும் அருள்புரியும் விழுப்புரம் மாவட்டம்.

👏 முக்கனிகளோடு முந்திரியும்கூட விளைகின்ற மாவட்டம் விழுப்புரம் மாவட்டம்.

👏 கருட பகவான் தோற்றுவித்ததும், வில்லிபுத்தூரார், சேக்கிழார், அப்பர், சுந்தரர், சம்மந்தரால் புகழ்ந்து பாடப்பட்டதுமான புண்ணிய நதியாம் கெடில நதி உற்பத்தியாவது விழுப்புரம் மாவட்டம்.

👏 குடவரைக் கோயில்கள் பலவற்றை கொண்டுள்ளதும் (திருநரங்குன்றம், பனமலைப்பேட்டை, சிங்கவரம்) பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதிகளை உள்ளடக்கியதும் விழுப்புரம் மாவட்டம்.

👏 தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழ மாமன்னனின் சகோதரி குந்தவை தன் கனவன் வந்தியத்தேவனோடு அரசாண்ட ராஜராஜ சோழபுரத்தையும் (தற்போது தாதாபுரம் - திண்டிவனம் அருகே உள்ளது), வீரசோழபுரத்தையும் உள்ளடக்கிது விழுப்புரம் மாவட்டம்.

👏 ராஜராஜ சோழனைப் பெற்றெடுத்த செம்பியன்மாதேவி பிறந்ததும், ராஜராஜ சோழனின் பாட்டனார் மலையமான் மன்னர்கள் ஆண்டதுமான திருக்கோவிலூரைக்கொண்டது விழுப்புரம் மாவட்டம்.

👏 ஸ்ரீரங்கத்துக்கும் பழமையானதும் தேவதட்சனால் கட்டப்பட்டதுமான மிகப்பெரிய திருஉருவோடு அருள்புரியும் அரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ள ஆதிதிருவரங்கம் விழுப்புரம் மாவட்டம்.

👏 சிவபெருமானே முதியவர் வேடத்தில் வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை தடுத்தாட்கொண்டதும், மெய்கண்டாருக்கு திருக்கயிலாயத்திலிருந்து வந்த பரஞ்சோதி முனிவர் சிவஞான உபதேசம் செய்து தீட்சையளித்த (திருவெண்ணெய் நல்லூர்) தெய்வீக மண் விழுப்புரம் மாவட்டம்.

👏 மான்களும் மயில்களும் வாழும் காப்புக்காடுகளைக் கொண்டது (உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர்) விழுப்புரம் மாவட்டம்.

👏 இந்து, முஸ்லீம், கிரித்துவ மக்கள் ஒற்றுமையாய் சகோதரர்களாய் வாழும் தேசிய ஒருமைப்பாடுள்ள மாவட்டம் எங்கள் விழுப்புரம் மாவட்டம்.

👏 தமிழ் மொழியில் உள்ள ஒரு சிறப்பான எழுத்து *"ழ"*. ழகர எழுத்தை மிகச்சரியாக உச்சரிக்கும் உண்மையான தமிழ் மக்களை உள்ளடக்கியதோடு மட்டுமல்லாமல் ழகர எழுத்தைக்கொண்ட ஊரினையே (வி *ழு*ப்புரம்) தலை நகரமாகக்கொண்ட தமிழகத்தின் ஒரே மாவட்டம் எங்கள் விழுப்புரம் மாவட்டம்.

👏 "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா!" "விழுப்புரம் மாவட்டத்தான் என்று சொல்லடா நான் ஆதி தமிழனென்று நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!"
Thank you

மேலும் தகவல் தெரிந்துக் கொள்ள எங்கள் YouTube channel ஐ subscribe செய்யவும்

https://www.youtube.com/channel/UCC83PW9fR75Y82HD-fMmz8g

No comments