Camphor is dangerous , கற்புரம் ஆபத்து ,karpuram is dangerous ,soodam effect ,சூடம்




'கற்பூரம் கொடிய விஷம்!.ஆகவே..
வீட்டில் குழந்தைகள் கைகளுக்கு எட்டும்_
 தூரத்தில் வைப்பதை தவிருங்கள்!!'

படித்ததில் பகிரத்_தூண்டிய_தகவல்..!

எனது நண்பரின் நண்பர் மகனுக்கு
நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை
கடந்த முப்பது நாட்களாக
‘ரோலர்கோஸ்டர்’ போல
மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோ
கேளுங்கள்:

“வீட்டில் சாமி போட்டோவிற்கு
முன் கற்பூரம் வைத்திருந்தோம்.
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து
மூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டு
கற்பூரத்தை கடித்து
தின்றுவிட்டான். அதை உடனடியாக
பார்த்த நான் கடித்திருந்த பாதியை
வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.

‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-
என்று மனைவி கூகுளில் பார்த்து
தெரிவித்த அடுத்த நிமிடமே, என்
மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.

அது நான்கு நிமிடம் நீடித்தது.

உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக்
கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.

முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை
தூங்கினால் எல்லாம்
சரியாகிவிடும் என்று
சொன்னார்கள்.

ஆனால், மீண்டும் கண்கள் செருக
ஆரம்பித்துவிட்டன. உடனே
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
குழந்தையை எடுத்துச் சென்றோம்.

கற்பூரத்திலிருக்கும்
‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்
பொருள் கடுமையான
பாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’
துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸி
மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.

அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி
குத்தும் போது குழந்தை எந்த
விதமான எதிர்ப்பையும் காட்டாதது
எங்களுக்கு அடிவயிற்றைக்
கலக்கியது. அதாவது அவன்
சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்
மோடு’க்கு
சென்றுவிட்டிருந்தான்.

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்
மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்
சென்டரின்’ குழந்தை நல அவசர
சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.

ஆம்புலன்ஸில் இருந்து
இறங்கும்போது “அப்பா!” – என்று
ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்
அது எனக்குத் தெம்பூட்ட
தைரியமானேன்.

கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்
பொருளின் மூன்றாம் நிலை
கோமாவுக்கு கொண்டு
சென்றுவிடும்.

அதை என் மகன்
குறைந்த அளவு சாப்பிட்டதால்
கோமா நிலைக்கு செல்லாமல்
தப்பித்துவிட்டான்.

இது ஒருவிதமான
அதிஷ்டமேயானாலும் அது
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே
சிகிச்சைக்கு கொண்டு
சென்றதாலும் இறையருளால் எங்கள்
கண்மணியை எங்களால் காக்க
முடிந்தது.

அதுவும் கிட்டத்தட்ட 16
மணி நேர மருத்துவப்
போராட்டத்துக்குப் பின்தான்
அதுவும் சாத்தியமாயிற்று!”

கேட்டீர்களா... விபரீதத்தை?

அதனால், கற்பூரம் போன்ற கொடிய
விஷப் பொருளை வீட்டில் குழந்தை
கைக்கு எட்டும் தூரத்தில் வைப்பதை
தவிருங்கள். குழந்தைகளுக்கு
எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள்.
அப்படி குழந்தைகள் ஏதாவது
சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்..
உடனே தாமதிக்காமல் தகுந்த
மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யுங்கள்.

 பகிருங்கள் எங்கேனும் ஒர் குழந்தை காப்பாற்றபடலாம்.

Subscribe my channel please
            Subscribe
           👆👆👆👆
              touch this


No comments